6 Jul 2017

ஒரு நாள் ராணுவ அமைச்சர்


ஒரு நாள் ராணுவ அமைச்சர்
நான் ஒரு நாள் ராணுவ அமைச்சரானால்
தீபாவளி துப்பாக்கி போல்
அனைத்து வகை துப்பாக்கிகளையும்
சுட்டுப் பார்ப்பேன்.
டிராபிக் மிகுந்த சாலையில்
பீரங்கிகளை ஓட்டிப் பார்ப்பேன்.
எதிரிகளை அழைத்து
வெடிகுண்டுகளை வீசி
கேட்ச் பிடித்து விளையாடிப் பார்ப்பேன்
கண்ணி வெடி மீது
ஒரு பட்டாம் பூச்சி உட்காரும் போது
அதனருகே ஒரு ரோஜா செடியை
நட்டு வைப்பேன்
ஆயுதம் வாங்க ஒதுக்கப்படும் நிதியில்
குழந்தைகளுக்கு எல்லாம் பலூன்கள்
வாங்கிக் கொடுப்பேன்
அந்த பலூன்களைப்
பெரியவர்களின் காதருகே
கொண்டு சென்று வெடிக்கச் செய்து
அவர்களின் போர்வெறியைத்
தணிக்கப் பார்ப்பேன்!
*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...