செயல்படு தத்துவம்
நான் எழுதும் விசயங்களைப் புரிந்து கொள்வது
கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் தொடர்ந்து படித்துக் கொண்டு வந்தால் அந்தத் தடை விலகி
விடும். இப்படிப் புரியாமல் படிப்பதில் இருக்கும் சுகத்தை உணர்ந்து கொண்டு விட்டால்
மனதில் அப்படி ஒரு கேள்வி மறுபடியும் எழாது.
இப்போது சில. தயவுசெய்து புரிந்து கொள்ள
வேண்டும் என்று முயற்சித்து மட்டும் படிக்காதீர்கள். புரியாமல் போய் விடும். ச்ச்ச்சாதாரணமாகப்
படியுங்கள். தானாகப் புரிந்து விடும்.
செயல் வழியே எண்ணங்களையும், சொற்களையும்
உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான செல்வாக்குள்ள மனிதனாக உங்களை மாற்றும்.
அதிகமாகச் சொற்களைப் பிரயோகித்து, குறைவாகச்
செயல்படுபவர்களை உலகம் ஒரு போதும் மதிக்காது.
அதிகமாகப் செயல்பட்டு, குறைவாகச் சொற்களைப்
பிரயோகிப்பவர்களையே உலகம் மதிக்கிறது.
ஆகவே செயலுக்கு முக்கியம் கொடுங்கள்.
நடைமுறைதான் முக்கியம். அதன் வழியே எண்ணங்களையும், செயல்களையும் உருவாக்கிக் கொள்ளுங்கள்.
உலகின் சக்தி வாய்ந்த மனிதராக நீங்கள் இருப்பீர்கள். இனியும் இதைத் தொடர்ந்து படித்துக்
கொண்டு இருக்காதீர்கள். போய்ச் செயல்படுங்கள். பக்கத்தில் குளம், ஏரி, கடல் ஏதாவது
இருந்தால் தள்ளி விட்டுக் கொள்ளுங்கள். வேறு வழி இல்லை.
*****
No comments:
Post a Comment