19 Jun 2017

சோம்பேறித்தனமாக நம்பிக்கை!


சோம்பேறித்தனமாக நம்பிக்கை!
            சதி,
            துரோகம்,
            பழிக்குப் பழி
                        இப்படித்தான் மாறுபட்ட சிந்தனைக்கான படங்கள் என்று சொல்லிக் கொண்டு வரும் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
            அறமற்றதை அப்படியே வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். கை தட்டி வேடிக்கைப் பார்த்து விட்டு வெளியே வருகிறார்கள் நம் மக்கள்.
            இருபது ரூபாய் டிக்கெட்டை அறுபது ரூபாய்க்கு விற்கும் போது அதை கேள்விக் கேட்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லை. திரையில் நாயகன் அநியாயத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் போது விசிலடித்துக் கொண்டாடுகிறார்கள்.
            ஏன் எப்படி?
            அது அப்படித்தான்.
            எல்லாம் பழகி விட்டது.
            இதையெல்லாம் தட்டிக் கேட்க ஒருவன் வருவான் என்ற நம்பிக்கையில் யார் மண்ணை அள்ளிப் போடப் போகிறார்கள் என்ற சோம்பேறித்தனம்தான்.
*****

No comments:

Post a Comment

Solutions available while changing lifestyles!

Solutions available while changing lifestyles! Samudhira used to drink only half of the water bottle she took to school. The rest of the w...