15 Mar 2017

இவர்கள்


இவர்கள்
நிறைய பணம் கொடுத்தும்
தோற்றுப் போகிறார்கள்
இலவசங்களை வாரி வழங்கியும்
டெபாசிட் காலியாகிறது
இந்த சனங்களுக்கும்
சனநாயகத்திற்கும்
ஏதோ பூர்வ ஜென்ம தொடர்பு இருக்கிறது
என்றும் சொல்ல முடியாது
அதே தேர்தலில்
குற்றம் சுமத்தப்பட்டவர்களை
மக்கள் பிரதிநிதியாக்கி
அழகு பார்த்து விடும்
அதிசயத்தைக் காண்கையில்.
*****

No comments:

Post a Comment