இட்டிலி வாழ்க்கை
அம்மா சுடும் இட்டிலிக்கு
அமாவாசை வரை
காத்திருக்க வேண்டும்.
அம்மியில் அரைபடும்
சட்டினிக்கு
அப்படி ஒரு ருசி இருக்கும்.
டப்பாவைத் திறக்கும்
போது
மிளகாய்ப் பொடி வாசம்
சுண்டி இழுக்கும்.
எல்லாம் மாறி
தினம் தினம்
இட்டிலியாகி விட்ட காலைப்
பொழுதுகளில்
மிக்சியில் அடிபட்ட
சட்டினி போல் இருக்கிறது
வாழ்வு.
*****
செய்தி
எத்தனையோ நட்சத்திரங்கள்
விழுந்த இரவுகளில்
செய்தியாயிருக்கும்
ஒரு பொழுது
நிலா விழுந்திருந்தால்.
*****
No comments:
Post a Comment