10 Mar 2017

அல்ல...


அல்ல...
கடைசியாக ஒரு ஆசை
என்றுதான்
தொடங்கி வைக்கப்படுகிறது
ஒவ்வொரு மனதிலும்
முதன் முதலாக
ஓர் ஆசை!

பவ்வியமாய்க் கேட்பவர்கள்
எல்லாம்
கடன்காரர்கள் அல்ல,
வரி ஏய்ப்பவர்கள்!

பீட்சா சாப்பிடுபவர்கள்
எல்லாம்
பணக்காரர்கள் அல்ல,
தட்டேந்தியும் நிற்கலாம்
கையேந்தி பவனில்!

எதையோ சொல்லி விட்டு
அதை எப்போதாவது
நினைவு வைத்துக் கொண்டு
கேட்பார்கள்,
ஞாபகச் சக்தியைச் சோதிப்பது போல
தர்ம சங்கடத்தின் குரூரம் புரியாதவர்கள்!

கேட்பதில் இருக்கும் ஆசை
புரிந்து விட்டால்
சொற்களைக் கடந்து விடலாம்!
சொற்களைக் கடக்கும் ஆசை
வருவதில் இருக்கிறது
விஷயம்!
*****

No comments:

Post a Comment