9 Mar 2017

உயில்


உயில்
நான் ஞானி என்ற சொல்லும்
ஞானம்
எப்போதும் வரப் போவதில்லை.

நீயெல்லாம் மனுசனா என்று
கேள்விக் கேட்பவன் மனுசனா?
மனுசனா என்று
மனுசனைக் கேள்விக் கேட்பதில்
இருக்கிறது மமதை.

உனக்கு மட்டும்
புரிய வைத்து விட்டால் போதும் என்ற
அறியாமையை
என்ன சொல்ல!

தயவுசெய்து என்னைப் பின்தொடராதே என்று
சொல்லிய பின்னும்
பின்தொடர்பவர்களுக்கு
உலகம் பெயர் சூட்டி வைத்திருக்கிறது
சீடர்கள் என்று.

இறந்தால் புதை்து விட்டுப் போ.
குருபூஜைக் கொண்டாடி
குருவாக நினைப்பவர்கள்
உயிர்த்தெழுந்து விடுவார்கள்.
*****

No comments:

Post a Comment