மன்னர் இனத்தின் புதிய வடிவங்கள்
மன்னர் இனம் என்ற ஓர் இனத்திற்கு எதிரானதுதான்
மக்களாட்சி. தேர்தல்கள் அதைத்தான் உறுதிபடுத்துகின்றன.
வாழ்க்கை என்பது ஒரு வட்டம் என்பது போல,
காலமும் ஒரு வட்டம் போல. பழையதே மீண்டும் திரும்புகிறது.
மன்னர் இனம் என்ற இனத்தின் மறுவடிவமாய்,
புதிய வடிவமாய் அரசியல்வாதிகள் என்ற ஓர் இனம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
அந்த இனத்தின் வாரிசுகள்தான் அதில் கோலோச்
ச முடிகிறது. அந்த இனத்திற்கு அணுக்கமாய் இருப்பவர்கள்தான் பிழைக்க முடிகிறது.
அவர்கள் மன்னர்களை விட அபாயகரமானவர்களாக
மாறிக் கொண்டு வருகிறார்கள். மன்னர்களைப் போல ஒவ்வொரு தேர்தல்களிலும் தங்களையே முன்னிருத்துகிறார்கள்.
தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் மாறாத, நிரந்தர பொறுப்பாளர்களாக வலம் வருகிறார்கள்.
ஒரு அரசியல்வாதியின் சாம்ராஜ்யம் அழிந்து
விட்டால் மாற்றம் வந்து விடும் என்று நினைத்து ஏங்குவதற்கும் முடியவில்லை. அதற்கு மாற்றாக
இன்னொரு அரசியல்வாதியின் சாம்ராஜ்யம் அதை விட மோசமாக எழுந்து விடுகிறது.
மன்னராட்சியில் வாழ்ந்த நம் முன்னோர்களின்
எச்சங்கள் நம் உடலில் இருப்பதால்தானோ என்னவோ, நமது வாக்குகளும் இதே போன்ற மன்னராட்சி
முறையிலான அரசியல்வாதி இனக் கட்சிகளையே குறி வைக்கின்றனவோ என்னவோ?
*****
No comments:
Post a Comment