செய்தி அடிமைகள்!
சில பரபரப்பான சம்பவங்கள் வாழ்க்கையை முடக்கி
விடுகின்றன. பேஸ்புக்கில் சிக்குவது, வாட்ஸ்அப்பில் மூழ்குவது, செய்திச் சேனல்கள் அருகே
தவம் இருப்பது என்ற வகையில் அந்த முடக்கம் அமைந்து விடுகிறது.
மனதின் எதிர்பார்ப்புகள் வேறு வேலையைச்
செய்ய விடுவதில்லை. இந்த நேரத்தில் யாரும் யாரையும் கண்டிக்க முடியாது. "என்னடா
எப்போ பார்த்தாலும் பேஸ்புக்கிலே கிடக்கிறாயே?" என்று செய்திச் சேனல்களையே பார்த்துக்
கொண்டிருப்பவரால் கேட்க முடியாது. "எப்ப பார்த்தாலும் வாட்ஸ் அப்தானா?"
என்று பேஸ்புக்கிலே மூழ்கியவரால் கேட்க முடியாது.
எல்லாருக்கும் இப்படி ஒரு அடிமைத்தனம்
இருக்கிறது. மேற்கூறிய மூன்று அடிமைத்தனமும் இல்லாதவர் செய்தித்தாளில் ஒரு வார்த்தை
விடாமல் படித்துக் கொண்டிருப்பார்.
செய்திகளைத் தெரிந்து கொள்ள முடியாமல்
நம்மால் இருக்க முடியாது என்ற நிலைக்கு நாம் அடிமைபடுத்தப்பட்டு விட்டோம்.
இந்தத் தகவல் தொடர்பை வைத்து நம்மை எது
வேண்டுமானாலும் செய்ய முடியும். ஒன்று, தகவல் தொடர்பை வழங்கி அடிமைகளாக்க முடியும்.
அல்லது, அதை வழங்காமல் பைத்தியமாக்கவும் முடியும்.
தவசிகளே தற்போது ஆசிரமம் வைத்து செய்திகளைப்
பரப்பத் தொடங்கி விட்டப் பிறகு யாரை என்ன சொல்வது?
அரசியல்வாதிகளிடம் பரபரப்புச் செய்திகளை
உருவாக்காதீர்கள் என்றா சொல்ல முடியும்? சொன்னால் அரசியலை விட்டே விருப்ப ஓய்வு வாங்கி
கொண்டு போய் விடுவார்கள்! அப்புறம் இந்த அரசியலை நாம்தான் சுமக்க வேண்டி வரும்!
*****
No comments:
Post a Comment