ஏமாற்றம்
"வாங்குற
பணத்துல வயலுக்கு ரெண்டு மணி நேரம் இன்ஜினை வெச்சு தண்ணி வைக்கலாம்னு பார்த்தேன்!"
வருத்தத்துடன் சொன்னார் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போனதால் வாடிய
பயிரைக் கண்டு வாடிய இராமலிங்கம்!
*****
ஓட்டு
"நம்ம
சாதிக்காரன்னு அவனுக்கு ஓட்டுப் போட்டுடாதீங்க!" என்ற அருணாச்சலம்
தொடர்ந்து சொன்னார், "நானும் உங்கச் சாதிக்காரன்தான்!"
*****
நானும்
காமராசர்
"நானும்
காமராசர்தான்யா!" என்ற தலைவர் பதினைந்துப் பள்ளிகளைத் திறந்திருந்தார்
அவர் பெயரில்!
*****
No comments:
Post a Comment