நாள்குறிப்பு சபதம்
ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு சபதத்தில்
தவறாமல் இடம் பெறுவது, இந்த ஆண்டிலிருந்து நாட்குறிப்பு எழுதுவது என்பதுதான்.
சபதத்தை உடைக்க சபதம் செய்த நாம், நாட்குறிப்பை
வாங்கியிருப்போம். எழுதுவதில் பின்வாங்கியிருப்போம்.
பிறகென்ன? அந்த நாட்குறிப்பு வீட்டுக்கார
அம்மாக்களுக்கு கோலம் போடும் கோல நோட்டாக, அதற்காகவாவது பயன்பட்டதே என்று ஆத்ம
திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
வரலாற்றில் பேரரசராக இருந்த பாபருக்கு
நாட்குறிப்பு எழுதும் அருமையான பழக்கம் இருந்திருக்கிறது. நாள்குறிப்பு எழுதும் அந்தப்
பழக்கம்மான் பாபர் நாமா எனும் வரலாற்று ஆவணத்தை நமக்குத் தந்திருக்கிறது.
சபதத்தை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால்,
அதைக் காரணமாக வைத்தாவது அந்தச் சபதத்தை நிறைவேற்ற முடியும் அனுபவஸ்தர்கள் சில கூறிய
அறிவுரையைக் கேட்டு, இந்த ஆண்டிலிருந்து கட்டாயம் நாட்குறிப்பு எழுதப் போகிறேன் என்ற
சபதத்தை என் நண்பனிடம் கூறினேன்.
"நீயெல்லாம் அந்தக் காலத்துல ஹோம்ஒர்க்கே
எழுதுனது இல்ல. வாத்தியார் செம மாத்து மாத்துனப்பவே
அதைப் பத்தி கவலைப்படாம அலட்சியமாக எழுதாம வருவே. நீயெல்லாம் நாட்குறிப்பு எழுதப் போறீயா?"
என்று அவன் கேட்டதிலிருந்து , "சத்தியமாக இனிமேல் சபதம் செய்த சபதத்தை யாரிடம்
சொல்ல மாட்டேன்!" என்ற சபதம் எடுத்துக் கொண்டேன்.
*****
No comments:
Post a Comment