14 Jan 2017

புனையா ஓவியம்


ஓட்டிடுவாங்க!
"போட்ட காசை எடுத்திடலாம்!" நிம்மதியானார் தயாரிப்பாளர், ஆளுங்கட்சிப் பிரமுகருக்குப் படத்தை விற்றதில்.
*****

புனையா ஓவியம்
குழந்தைகள் வரைந்த மலை ஓவியத்தின் அடிவாரத்தில் மலையை வெட்டிக் கொண்டு இருந்தார்கள் கிரானைட் வெட்டுபவர்கள்.
*****

வித்து
கல்யாணமாகி நான்கு வருடங்களாக குழந்தையில்லாத யோகேஷ், வாங்கிச் சென்றான் மனைவிக்குப் பிடித்த சீட்லெஸ் பழங்களை.
*****

ப்ரி ஷோ
டிக்கெட் கிடைக்காத விரக்தியில், தியேட்டர் வாசலிலே ஸ்மார்ட் போனில் படத்தை டெளன்லோட் செய்து பார்த்து முடித்தான் ராகவ்.
*****

No comments:

Post a Comment