1 Jan 2017

டவுன் பிரயாணங்கள்


டவுன் பிரயாணங்கள்
எப்போது போனாலும்
பேத்திக்கு ஒரு
புத்தாடை எடுத்து விடும்
பாட்டி
மாற்றி மாற்றி
கட்டிக் கொள்கிறாள்
சாயம் போன
கட்டம் போட்ட
பச்சை புடவையொன்றையும்
சிவப்பு புடவையொன்றையும்!
*****

பதவிகளின் இருப்பு
நன்றாக காலில் விழவும்
அழவும்
தெரிய வேண்டும் என்றார்கள்.
பதவியே வேண்டாம் என்று
சென்று விட்டாள்
கூலிக்கு மாரடிப்பவள்!
*****

கணவனான பின்பு...
பார்க்கும் பெண்களை எல்லாம்
பார்வையால்
கற்பழித்த பின்
ஆனான்
சந்தேகப்படும் கணவனாக!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...