1 Jan 2017

ஞானத் திறப்பு


தடுமாற்றம்
ஓரே குத்தில் உயிரை எடுத்தவன், ரத்தம் கொட்டும் கத்தியோடு, தடுமாறிக் கொண்டு இருந்தான் ஓடிக் கொண்டிருந்த டி.வி.யை ரிமோட்டில் நிறுத்தத் தெரியாமல்.
*****

காப்பாற்றல்
பேருந்தில் சில்மிஷம் செய்தவனைப் பொதுமக்கள் அடித்த அடியிலிருந்து காப்பாற்றிக் கொண்டு போனார் போலீஸ்காரர்.
*****

நிவாரணம்
"பத்து நாளா வந்து நிற்குறேன்! நிவாரணம் கிடைச்சபாடில்ல!" என்ற அலமேலுவிடம் "கவலைப்படாதே! இன்னிக்கு எப்படியும் கொடுத்திடவாங்க!" என்ற பத்மாவின் வார்த்தைகள் அலமேலுவுக்கு நிவாரணமாக இருந்தது.
*****

ஞானத் திறப்பு
"கருத்துக் கணிப்புப்படி நம் கட்சி ஜெயிக்கிறது கஷ்டம்!" என்று சொல்லப்பட்டதும், தலைவர் சொன்னார், "கூட்டணிக் கதவுகளைத் திறந்து வையுங்க!"
*****

கிப்ட்
கடைசியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் கொடுத்த அந்த கிப்ட் எனக்கே திரும்பி வந்தது கிப்டாக.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...