2 Jan 2017

ஓ.கே. கண்மணி


சமத்துவம்
"படத்துல எல்லா பாட்டையும் நான்தான் எழுதுவேன்!" என்று கண்டிசன் போட்டார் அந்த சமத்துவ கவிஞர்.
*****

போட்டுக்குங்க!
கோயிலைப் பார்த்ததும், கணவனிடம் "கன்னத்துல போட்டுக்குங்க!" என்றாள் ஹெல்மெட்டை கையில் வைத்துக் கொண்டு டூவீலரின் பின்னால் அமர்ந்திருந்த மனைவி.
*****

ஓ.கே. கண்மணி
"காதலிக்கிறது தப்பு இல்லம்மா!" என்று சொன்ன அப்பாவே, அடுத்துச் சொன்னார், "நம்ம சாதி பையனா பார்த்து காதலிம்மா!"
*****

வாக்குறுதி
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 251 ரூபாய் ஸ்டார்போனை விலையில்லா ஸ்மார்ட்போனான அனைவர்க்கும் அளிப்போம்!" வாக்குறுதி கொடுத்தார் தலைவர்.
*****

டெலிவரி
"இந்தத் தேர்தல்ல பணம் கொடுக்க முடியாது தலைவரே!" என்பதைக் கேட்டதும், சிரித்துக் கொண்டே தலைவர் சொன்னார், "கேஷ் ஆன் டெலிவரி மாதிரி, டெலிவரி ஆன் கேஷ்! எல்லாரும் டெலிவரி பாய்ஸ் ஆகுங்க!"
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...