2 Jan 2017

சுகர்


வாக்குரிமை
"உங்கள் வாக்கு! உங்கள் உரிமை!" என்று வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் முழங்கி விட்டு வீடு வந்தவர் மனைவியிடம் சொன்னார், "அந்த சின்னத்துல பார்த்து கரெக்டா பட்டனை அழுத்திடு!"
*****

உறுதிப்படுத்தல்
"சாமியாருக்கு என்னப்பா சுகபோகம்?" என்றவர் ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்து உறுதிபடுத்திக் கொண்டார் கண்காணிப்புக் கேமரா இல்லை என்பதை.
*****

குடி
"எப்பவாச்சும் குடிப்பாரு!" என்று சொல்லி மணம் முடிக்கப்பட்ட மாப்பிள்ளை, எப்போதும் குடித்துக் கொண்டே இருந்தார்.
*****

நீட்டல்
ஓட்டுக்காக ஆயிரத்தை நீட்டிய கண்ணாயிரத்திடம், "அந்த கட்சிக்காரங்களே ஆயிரம் கொடுத்தாங்களே!" என்று முனியம்மா சொன்னதும், ஒரு நிமிடம் யோசித்த கண்ணாயிரம் ரெண்டாயிரமாக எடுத்து நீட்டினான்.
*****

சுகர்
வந்திருந்த பேஷண்டுக்கு சுகருக்கான மாத்திரை மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டு, டப்பாவில் இருந்து நாவல் கொட்டைப் பொடியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு தண்ணீரை ஊற்றிக் கொண்டார் டாக்டர் தன்னுடைய சுகருக்கு.
*****

2 comments:

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...