2 Jan 2017

கேட்டுக் கொண்டதற்கிணங்க...


கேட்டுக் கொண்டதற்கிணங்க...
நண்பன்
கேட்டுக் கொண்டதற்கிணங்க
குடிக்கத் தொடங்கியவன்
அதன் பின்
அம்மா
அப்பா
மனைவி
பிள்ளை என
யார் கேட்டுக் கொண்டதற்கு
இணங்கவும்
நிறுத்தவே இல்லை!
*****

நல்லவர்கள்
நாம் இருவரும்
நல்லவர்களாகவே இருந்தோம்
நேரில் சந்தித்துக் கொள்ளும்
நாள்கள் வரை!
*****

சாவிகள்
சாவி கொடுக்கப்பட்ட பொம்மை
இயக்கத்தை நிறுத்தும் போதில்
அழத் தொடங்கும்.
போம்மைக்கு மீண்டும்
சாவி கொடுத்து
இயங்கத் தொடங்கும் போதில்
சிரிக்கத் தொடங்கும்.
மனதில் தொக்கி நிற்கும்
சாவி கொடுத்தது
பொம்மைக்கா? குழந்தைக்கா?
என்ற கேள்வி.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...