2 Jan 2017

சுயம்


பேச்சுகள்
ஆயுத வியாபாரிகள்
சமாதானம் பேசினார்கள்
"சமாதானத்திற்காக ஆயுதம் ஏந்துவோம்!"
*****

ஏக்கம்
அம்மா இல்லாத
நிலவு
ஏக்கத்துடன் பார்க்கும்
குழந்தைக்கு ஊட்டிக் கொண்டிருக்கும்
அம்மாவை!
*****

சனநாயகம்
தோற்றவனும் வரவில்லை
ஜெயித்தவனும் வரவில்லை
தொகுதிக்குள்
தேர்தல் வரும் வரை!
*****

சுயம்
பேசக் கற்றுக் கொண்ட கிளி
ஒருநாளும் பேசவில்லை
கதவைத் திற என்று.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...