ஆசுவாசம்
மாதத்தின்
முதல் நாள்
சம்பளம்
என்ற மகிழ்ச்சி
போயிற்று!
எந்தக்
கடன்காரன்
எப்போது
கதவைத் தட்டுவான்,
இன்ஸ்டால்மெண்ட்
வசூலிப்பவன்
எப்போது
எதிர்படுவான்,
மளிகைக்கடை
அண்ணாச்சி
எப்போது
என்னாச்சி என்பார்
என்பது
புரியாமல்
குழம்பி
நிற்கிறது
மாதத்தின்
முதல் நாள்!
மாதத்தின்
இந்த நாள்
அந்த நாள்தான்
என்று
தெரிந்தும்
கிழித்துக்
கசக்கித் தூக்கி எறிகையில்
மாதத்தின்
முதல் நாளை
இரண்டாம்
நாளாய்க் காட்டுகிறது
காலண்டர்!
கொஞ்சம்
ஆசுவாசம் கொடுக்கிறது
அது
நேற்றே
எல்லா பாக்கிகளையும்
பட்டுவாடா
செய்து விட்டதாக!
*****
No comments:
Post a Comment