1 Jan 2017

குற்றம் துலக்குதல்


பேசாச் சொற்கள்
பேச முடியாத
சொற்களைப்
பேசி விட்டுச் செல்கிறது
உன்
பொன்
முத்தம்!
*****

தொடர்ச்சியாக...
குழியில்
குப்புறத் தள்ளி விடும் வரை
வந்து கொண்டே இருக்கும்
நயவஞ்சக வார்த்தைகள்!
*****

குற்றம் துலக்குதல்
காலையில் எழுந்ததும்
பல் துலக்காத
தங்கள் குழந்தை மீதான
குற்றச்சாட்டோடு வருகின்றனர்
தாயும் தந்தையும்!
ஒரு நாளைக்கு
நான்கு முறை
பல் துலக்குகிறாயாமே
என குழந்தையை விசாரித்து
சமன் செய்து
சரியாக்கி விடுகிறார்
அன்பான ஆசிரியர்!
*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...