1 Jan 2017

எல்லாம் நம்ம ஆளு!


வீட்டுல விசேசம்
"எங்க வீட்டுல பசும்பால்தான்!" என்றான் பாக்கெட் பாலுக்கு ஏஜென்சி எடுத்தவன்.
*****

எல்லாம் நம்ம ஆளு!
"நம்ம ஆட்களை வெச்சே ஹாலிவுட் ரேஞ்சுக்கு பின்னியிருக்கோம் சார்!" என்றார் இயக்குனர். "வெல்டன்! அந்த சாங்கை மட்டும் பாரீன்ல எடுத்திடுவோம்!" என்றார் புரடியூசர்.
*****

நோ சான்ஸ்
"படத்துல ஒரு பாட்டுக் கூட கிடையாது!" என்று இயக்குனர் சொல்ல, "அப்ப பாரீன் சாங்குக்கு நோ சான்ஸ்! இந்த சம்மரும் நம்ம நாட்டுலதானா?" அலுத்துக் கொண்டாள் ஹீரோவின் மனைவி.
*****

நம்பிக்கை
"கூட்டணி அமையலேன்னு சோர்ந்துடாதீங்க!" என்று தலைவர், உடனடியாக, "கூட்டணிக்காக கொடுக்க வெச்சிருந்த பத்து பெட்டி மிச்சம் இருக்குறதை மறந்திடாதீங்க!" என்று நம்பிக்கை ஊட்டினார்.
*****

கேட்டல்
அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்கும் மகள், ஏதாவது வேண்டும் என்றால் முதலில் அம்மாவைத்தான் கேட்கிறாள்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...