1 Jan 2017

ஏ.டி.எம்.க்குப் போனவர்


ஏ.டி.எம்.க்குப் போனவர்
            சமத்து சம்புலிங்கத்துக்கு ஊரெங்கும் கடன் இருந்தது. அவரைத் தேடிக் கொண்டு நொடிக்கொரு முறை கடன்காரர்கள் வர ஆரம்பித்தனர்.
            சம்புலிங்கம் அங்கங்கே ஒளிந்து கொண்டோ, எங்காவது ஓடிப் போயோ நிலைமையைச் சமாளித்துக் கொண்டிருந்தார்.
            ஒரு நாள் சமத்து சம்புலிங்கம் குதிருக்குள் ஒளிந்து கொண்டார். "யாராவது கடன் காரன் வந்து கேட்டால் நான் வெளியில போயிருக்கிறதாச் சொல்லு!" என்று மனைவியிடம் சொல்லிவிடும்படி கூறினார்.
            "நீங்க வர்ற வரை இருக்கிறதா சொல்லி கடன்காரன் திண்ணையிலேயே உட்கார்ந்துட்டா என்ன பண்றது?" என்றார் அவரது மனைவி கவலையுடன்.
            "ஏ.டி.எம்.ல பணம் எடுக்கப் போயிருக்கிறதா  சொல்லு! நான் திரும்பி வர எத்தனை நாளாகும்னு புரியாம எழுந்து போயிடுவான்" என்றார் சம்புலிங்கம்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...