1 Jan 2017

ஆப்ஸ்


ஆப்ஸ்
"எப்ப பார்த்தாலும் மொபைல் ஆப்ஸையே நோண்டிகிட்டு கிடக்குறான்! சரியாவே சாப்பிட மாட்டேங்றான்!" என்ற நந்தினியிடம், "கவலைப்படாதே! அவன் நல்லா சாப்பிடறதுக்கு ஒரு ஆப்ஸ் ரெடி பண்ணிடறேன்!" என்றான் ஹரிஷ்.
*****

கெளண்டர்
என்கெளண்டரில் போட்டுத் தள்ள புறப்பட்ட, என்கெளண்டர் ஸ்பெஷலிஸ்ட் வீரமுத்து மாரடைப்பால் காலமானார்.
*****

வேலை
"தமிழ் படிச்சா எல்லாம் வேலை கிடைக்காதுங்க!" என்றார் போகிறப் போக்கில் பட்டிமன்ற பேச்சாளர்.
*****

பிரச்சாரம்
தேர்தல் கமிஷனும் பிரச்சாரம் செய்கிறது நோட்டாவுக்கு.
*****

கண்டுபிடிப்பு
"ஒரு கிளிக்!" என்று செல்பி எடுத்துப் பார்த்தவன் சிலையானான். "சக்சஸ்!" என்று கத்திக் கொண்டே தெருவில் ஓடினார், செல்பி எடுத்தால் சிலையாகும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...