1 Jan 2017

சம்புலிங்கத்தின் ஊரில் ஒரு ரெங்கநாதன் தெரு


சம்புலிங்கத்தின் ஊரில் ஒரு ரெங்கநாதன் தெரு
            "என்ன இருந்தாலும் சென்னையில இருக்குற ரெங்கநாதன் தெரு மாதிரி வருமா?" என்று பீற்றிக் கொண்டிருந்தார் சென்னையிலிருந்து வந்திருந்த சமத்து சம்புலிங்கத்தின் மாமா பையன்.
            சம்புலிங்கத்துக்கு சுர்ரென்று ஏறியது.
            சட்டென்று கோபப்பட்டு விடக் கூடாது என்று மாமா பையன் கையைப் பிடித்து பரபரவென்று இழுத்துக் கொண்டு பக்கத்துத் தெருவுக்குச் சென்றார் சம்புலிங்கம்.
            "அடேங்கப்பா! இந்த தெரு தி நகர் ரங்கநாதன் தெருவைத் தாண்டி பயங்கரமா கூட்டமா இருக்கே!" மூக்கின் மேல் விரல் வைத்து அசந்து விட்டார் மாமா பையன்.
            சம்புலிங்கம் அமைதியானார். மனசுக்குள் பெருமிதம் வந்தது.
            அது சரி! அந்தத் தெருவில் அவ்வளவு கூட்டம் இருந்ததுக்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?
            அந்த தெருவில் நான்கு ஏ.டி.எம்.கள் இருந்தன.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...