1 Jan 2017

மறுபக்கங்கள்


பறத்தல்
வளைந்து பறக்கும்
அவசியம்
பறவைகளுக்கில்லை!
*****

மறுபக்கங்கள்
விழாக்களின் படப்பதிவுகளில்
முதுகைக் காட்டி நிற்பதாக
வருத்தப்படுபவர்களுக்குப் புரியாது
எப்போதும் வேலைகள்
பின்தொடரும் மனிதர்களுக்கு
அதை கவனிக்கப் பொழுதுகள்
இருக்காது என்பது.
சரியாக முறையாக நிற்பவர்கள்
அவர்களின் ஆடைகளைக் கூட
அவர்கள் துவைப்பது கிடையாது
என்பது உலகம் அறிவதாகுக.
ஆடம்பரத்திற்கும்
அலங்காரத்திற்கும் நிற்பவர்களும்
வியர்வை சிந்தி உழைப்பவர்களும்
ஒரு வகையினர் அல்ல.
உழைப்பின் முன் மண்டியிடுபவர்கள்
அந்த கணத்தில் வாழ்பவர்கள்
உறைந்து போகும் பதிவுகளில்
தொலைந்துப் போகாதவர்கள்.
ஒரு நாள் புரிந்து கொள்வார்கள்
உண்பவருக்கு இருக்கும் உரிமை
வியர்வை சிந்துபவர்களுக்கும்
உண்டு என.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...