20 Dec 2016

எப்படி இப்படி மோசடி?


எப்படி இப்படி மோசடி?
            நாகப்பட்டினத்தில் ஒரு காவலர் 2 கோடி மோசடி. இப்போதெல்லாம் மோசடிகள் என்றால் கோடிகள்தான். இந்த லட்சம், இந்த ஆயிரம் இவைகளெல்லாம் அவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை.
            திருச்சியில் துண்டு துண்டாக் கிடக்கும் பழைய 1000 ரூபாய் நோட்டை காவலர் ஒருவர் பொறுக்கிக் கொண்டு இருக்கிறார். திருச்சிக்காரர்களுக்குக் குசும்பு ஜாஸ்தி!
            சூரத்தில் ஒரு டீக்கடைக்காரரிடம் 10 கோடி பறிமுதல். குஜராத்தில் இப்படித்தான் நடக்கும் போலிருக்கிறது!
            இராமநாதபுரத்தில் 23 லட்சம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. இந்த மாத்திரைகளை யாரை வைத்து எண்ணுவார்கள்? எப்படி எண்ணுவார்கள்? நம்ம ஊரில் நாலு மாத்திரைகளை எண்ணிக் கொடுப்பதற்குள் நாலு தடவை கணக்குப் பார்த்து விடுகிறார்கள்.
            நமக்கெல்லாம் ஒரு நூறு ரூபாய் கொடுத்து சில்லரை வாங்கி அதை சரியாக எண்ணி முடிப்பதற்குள் மாமாங்கம் ஆகி விடுகிறது. அதுவும் கழித்தலில் நிறைய சந்தேகம். குறிப்பாக ரூ. 34.50, ரூ. 52.50, இந்த மாதிரி தொகைக்கு எல்லாம் பொருள் வாங்கி அதற்கு மீதி வாங்கும் போது தலைசுற்றி விடுகிறது.
            நம்ம மளிகைக் கடை அண்ணாச்சியும் கம்ப்யூட்டரும் வாங்கி வைக்க மாட்டேன்கிறார். எல்லாவற்றையும் மனதுக்குள்ளே கணக்குப் போட்டு, பாக்கிக் கொடுக்கிறார். அவர் சரியாகத்தான் கொடுக்கிறார். இருந்தாலும் நாம் ஒரு முறை கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப் பார்த்தால்தானே மனதுக்குத் திருப்தி. அதில்தான் நமக்கு மேற்படி மண்டைக் குழப்படியான சிக்கல்.
            இப்போது மனதுக்குள் மேலும் அதிகப்படியான சிக்கல் என்னவென்றால், இந்த கோடிக்கணக்கான மோசடிகளையெல்லாம் இவர்கள் எப்படி மண்டைக் குழப்படி இல்லாமல் அசால்ட்டாக ‍செய்கிறார்கள் என்பதுதான். டிப்ஸ் இருந்தால் கொடுக்கவும். முடியாவிட்டால் ஒரு ஐம்பது ரூபாய்க்கு டாப் அப்பாவது பண்ணி விடவும்.       
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...