4 Nov 2016

பெரும்பாலான பொழுதுகளில்...


படையல்
எடுத்துப் சாப்பிடாத
கடவுளுக்கு
எந்நேரமும்
படையல்!
*****

வளர்ச்சி
வறண்ட நிலத்திலும்
வளர்ந்து நிற்கின்றன
டவர்கள்!
*****

பெரும்பாலான பொழுதுகளில்...
பயணிக்கப் புறப்படும்
நேரங்களில்
காத்திருக்கவும்,
காத்திருக்கும் நேரத்தில்
பயணிக்கத் தயாராகவும்,
அவசரமாய் இறங்கிக்
கொண்டிருக்கும் நேரத்தில்
நான்காவது மாடியில்
பழுதாகி நின்று விடவும்
செய்கின்றன லிப்டுகள்!
சீந்துவாரின்றி
விரிந்து கொண்டே செல்லும்
படிகட்டுகளில்
படிந்து கொண்டிருக்கின்றன
புழுதிகளும் தூசுகளும்!
*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...