26 Nov 2016

தெறி ஹிட்


அழிவு
"இப்படியே போனா 2200 க்குள்ள உலகம் அழிஞ்சிடும்!" வருத்தத்தோடு புறப்பட்டான் மனித வெடிகுண்டு முருகேசன்.
*****
தெறி ஹிட்
"தல படமா? தளபதி படமா? எது தெறி ஹிட்?" கேட்டான் ஹரிஷ். "ரெண்டுமே இல்ல! அந்த பேய்படம்தான் அதிரிபுதிரி ஹிட்!" என்றான் மனிஷ்.
*****
இடுக்கண் வருங்கால்...
"பிரெஸ்ட் கேன்சர்!" என்றதும் சிரித்துக் கொண்டாள், "இனிமே எவன் கண்களும் அங்கே மொய்க்காது!"
*****
மாதிரி
"பொண்ணு ஹீரோயின் மாதிரி இருக்காடா!" என்ற அம்மாவிடம், "மேக்கப் போடாம எப்படிம்மா இருக்கா?" என்றான் அர்விந்த்.
*****
செல்() பேச்சு
முக்கியமான விசயமாக செல்லில் பேசிக் கொண்டிருந்த அப்பாவைத் துரிதப்படுத்தினாள் அம்முக்குட்டி, "சீக்கிரம்பா! ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாடணும்!"
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...