3 Nov 2016

தலைவர்


சுழற்சி
வாழ்க்கை சுழற்சி
பட்டாம் பூச்சிகளுக்கு.
வாழ்க்கையே சுழற்சி
டயர்களுக்கு,
பட்டாம் பூச்சிகளாகவும் இல்லாமல்
டயர்களாகவும் இல்லாமல்
சுழலும் வாழ்க்கை
நமக்கு!
*****

தலைவர்
"மூத்த மகன்
மெடிக்கல் காலேஜ் நடத்துகிறான்,
இளைய மகன்
இன்ஜினியரிங் காலேஜ் நடத்துகிறான்,
மகள் ஒருத்தி
பி.எட். காலேஜ் நடத்துகிறாள்!"
பெருமையோடு சொல்லி
பூரித்துப்போவார்
மூன்றாம் வகுப்பைத் தாண்டாத
தலைவர்!
*****


சுழற்சியின் முடிவில்
சக்கரங்கள் சுழல்கின்றன
அலுவலகத்திற்கும்
வீட்டிற்குமாக.
அவைகளுக்கு
அலுப்பதும் இல்லை
சலிப்பதும் இல்லை!
தேய்ந்துப் போன
சக்கரங்களுக்கு
ஓய்வு கொடுக்கப்படும் போது
புதிய சக்கரங்கள்
தயாராகி விடுகின்றன
சுழல்வதற்கும்
தேய்வதற்கும்!
*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...