மன கோபுரங்கள்
அசலான
கேள்வியை எதிர்கொள்ளும் போது
உடைந்து
போவீர்கள்
உங்கள்
அழுகை உங்கள் பலவீனத்தைக் காட்டலாம்
அநேகமாக
உறைந்து போதலும் நடக்கலாம்
உங்கள்
மனம் வெடித்துச் சிதறியும் போகலாம்
துண்டு
துண்டாகக் கிடக்கும் இதயத்தை
நீங்கள்
பொறுக்கிக் கொண்டிருக்கலாம்
எதுவும்
நடக்காது என்றும் சொல்ல முடியாது
எது
நடக்கும் என்றும் சொல்ல முடியாது
ஒவ்வொன்றும்
நடக்கும் போது
நீங்கள்
ஒவ்வொரு மாதிரியாக வினையாற்றுவீர்கள்
எல்லா
உதவியும் கிடைக்கும் போதும் தோற்றுப் போவீர்கள்
புத்திசாலித்தனமாகச்
சிந்தித்துச் செயல்படும் போது
மிகப்பெரும்
சறுக்கலை எதிர்கொள்வீர்கள்
என்ன
செய்ய முடியும் உங்களால்
எல்லாவற்றையும்
எதிர்கொள்வதைத் தவிர
ஒரு
சிலவற்றிற்குக் காரணத்தைக் கண்டுபிடித்து விட்டதற்காக
எல்லாவற்றுக்கும்
காரணத்தைத் தேடாதீர்கள்
முடங்குவதும்
திமிரி எழுவதும் மாறி மாறி நடக்கும்
எல்லாம்
துடைத்தெறியப்படும் போது
நீங்கள்
புதிதாக முளைத்தெழுவீர்கள்
நம்பிக்கையோ
அவநம்பிக்கையோ விசயமல்ல
வெறுமனே
இருக்கையில் வெற்றிடத்தில்
பறவையைப்
போல சிறகடித்துக் கொண்டிருப்பீர்கள்
எதில்
மோதி விழுகிறீர்களோ
அது
நீங்கள் எழுப்பிய மனகோபுரங்கள்
*****
No comments:
Post a Comment