வீடுபேறு
அனுமதி பெற்று வீடு கட்டுவது என்றால்
குளவி அனுமதி பெற்றா கூட்டைக் கட்டுகிறது
பாம்பு அனுமதி பெற்றா புற்றைக் கட்டுகிறது
தேனீக்கள் யாருடைய அனுமதியைக் கேட்கின்றன
தூக்கணாங்குருவி யாரைக் கேட்கிறது
முன் அனுமதி பெறாமல் வீட்டைக் கட்டியது
குற்றமாகி விட்டது
குளவிக் கூட்டை பாம்புப் புற்றை தேன் கூட்டை
குருவிக் கூட்டை
கலைத்தால் கொட்ட வரலாம் கொத்த வரலாம்
மனிதன் கோபம் கொள்ளலாம்
கோபித்துக் கொண்டு மறுகூட்டைக் கட்டாமலா
போய் விடுகின்றன
மறுவீட்டைக் கட்டித்தான் ஆக வேண்டும்
இந்த முறை முன் அனுமதி வாங்கி விட வேண்டும்
அதற்கான மன உளைச்சல்களைக்
கால் அலைச்சல்களைத் தாங்கித்தான் ஆக வேண்டும்
இந்தக் குடைசல்கள் வேண்டாம் என்றால்
வாடகை வீட்டில் வாழ்ந்து முடித்துக் கொள்ள
வேண்டும்
வாடகை வீடு கட்டுபவர்கள் ஒரே நேரத்தில்
ஒன்பது வீடுகளுக்கு முன் அனுமதி பெறத்
தெரிந்தவர்கள்
*****
No comments:
Post a Comment