7 Sept 2022

அலுக்காத கவிதை

அலுக்காத கவிதை

படிக்க வைக்க வேண்டும்

வேலைக்கு அனுப்ப வேண்டும்

வீடு கட்ட வேண்டும்

கல்யாணம் செய்து வைக்க வேண்டும்

குழந்தை பிறக்க வைக்க வேண்டும்

குழந்தைக்கு ஸ்கூலில் சீட் வாங்கி வைக்க வேண்டும்

பிறகு வழக்கம் போல் முதலிலிருந்துதான்

படிக்க வைக்க வேண்டும்

வேலைக்கு அனுப்ப வேண்டும்

வீடு கட்ட வேண்டும்

கல்யாணம் செய்து வைக்க வேண்டும்

குழந்தை பிறக்க வைக்க வேண்டும்

குழந்தைக்கு ஸ்கூலில் சீட் வாங்கி வைக்க வேண்டும்

பிறகு வழக்கம் போல் முதலிலிருந்துதான்

திரும்ப திரும்ப எழுதுவதில் என்ன இருக்கிறது

நீங்களே திரும்ப திரும்ப படித்துக் கொள்ளுங்கள்

எவ்வளவு சுவாரசியமான கவிதை

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...