6 Sept 2022

ப்ளாட்பார அடிகள்

ப்ளாட்பார அடிகள்

காம்பௌண்ட் சுவருக்குள் வீடு

வீட்டுச் சுவருக்குள் ரூம்கள்

ரூம் சுவருக்குள் கேபின்கள்

கேபின்களுக்குள் குறுக்குத் தடுப்புக்குள்

சிறு சிறு அலமாரிகள்

அலமாரிகள் ஒவ்வொன்றுக்கும் கதவுகள்

எத்தனை கதவுகள்

எத்தனை பூட்டுகள்

இவ்வளவு இருந்தும் கூர்க்கா காவல் வேண்டும்

போலீஸ் காவல் வேண்டும்

சிசிடிவி காமிராக்கள் தொடர்ந்து இயங்க வேண்டும்

ப்ளாட்பாரத்தில் படுத்திருப்பவனைக் கேட்டால்

கதவாவது மண்ணாவது

பூட்டாவது பூரானாவது

பாதுகாப்பாவது பந்தோபஸ்தாவது என்கிறான்

ப்ளாட்பாரவாசி ஆவது சாதாரணமல்லவே என்றால்

எனக்கும் ப்ளாட்பார்ம் பட்டா போட்டுத் தாருங்கள் என்கிறீர்கள்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...