பொறுமை உடலினும் பெரிது
நாயொன்று அடிபட்டுக் கிடந்தது
தூக்குவார் யாருமில்லை
சீந்துவார் யாருமில்லை
காக்கைகள் குருவிகள் கொத்தித் தின்றது போக
எஞ்சியது புழுக்கள் தின்று
சாலையோடு சாலையாகப் படிந்தது
பூனையொன்று அடிபட்ட போதும்
இதே கதை என்பதால்
சொன்ன கதையை சொல்லக் கேட்பது
கருணைக் கொலையில் சேரும்
பாம்பொன்று அடிபட்ட போது
பயந்து போனாலும் பழகிப் போனது
எலியொன்றின் துர்நாற்றத்தை
சும்மா சொல்லக் கூடாது
காக்கைள் தின்று செரித்தன
மனிதர்க்கு அந்தக் கஷ்டமில்லை
ஆம்புலன்ஸ்கள் தூக்கிச் செல்கின்றன
மனிதர்களின்றி பிற அடிபட்டால்
மனிதர்கள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்
கண்ணையும் மூக்கையும் கைகளையும் இதயத்தையும்
*****
No comments:
Post a Comment