18 Aug 2022

ஒரு துளியில் ஒளிந்திருக்கும் சமாதானம்

ஒரு துளியில் ஒளிந்திருக்கும் சமாதானம்

அழுவதைப் போன்ற சமாதானம் ஏதுமிருக்கிறதா

தயவுசெய்து கொஞ்சம் அழ விடுங்கள்

ஆறுதல் சொல்லாதீர்கள்

உங்கள் ஆறுதல்கள்

அதுவாகக் கிட்டக்கூடிய சமாதானத்தை

பல மைல் தூரம் தள்ளி வைக்கின்றன

அன்பையும் அரவணைப்பையும்

தள்ளி வைக்க கற்ற சூட்சமங்கள் மொழிகள்

இப்படிச் சொல்வதால் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்

ஆறுதல் மொழிகள் அவ்வளவு மோசமானவை

மன மென்மையைப் புரிந்து கொள்ளும் வல்லமையற்றவை

உங்கள் ஆறுதலைப் புரிந்து கொள்ள

என்னைப் பார்த்ததும் நீங்கள் சிந்தும்

ஒரு துளி கண்ணீர் போதும்

அந்த ஒற்றைத் துளியின் ஆறுதலில்

கொதிக்கும் சூரியனும் சமாதானமடைந்து விடும்

உங்கள் ஒற்றை மொழியோ

உருகி உறைந்திருக்க வேண்டிய பனித்துளியைக்

கொதிக்க வைத்து விடுகிறது

*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...