21 Aug 2022

அடி முடி காணல்

அடி முடி காணல்

முடி கொட்டி விட்டால் எவ்வளவு நன்மை

ஷாம்பு செலவு மிச்சம்

சோப்பையே தலைக்கும் தேய்த்துக் கொள்ளலாம்

எண்ணெய் செலவிலும் சீப்பு செலவிலும்

கணிசமாக மிச்சம் செய்யலாம்

முடி வெளுக்கும் என்ற கவலையில்லை

டை அடிக்க வேண்டிய அவசியமும் இல்லை

மழையில் நனைந்தால்

தலை துவட்டிக் கொள்ள வேண்டியதில்லை

யாராவது கொட்டும் முடிக்காகச் செலவு செய்வார்களா

அமேசான் காடுகளிலும் அண்டார்டிகா பனிமலைகளிலும்

மருந்து தேடுவார்களா

கேசாதித் தைலங்கள் நாடி ஓடுவார்களா

சொட்டைத் தலையர்கள் என்று சொல்வார்கள்

மண்டையில் முடி உள்ளவர்களும்

மண்டை முடிக்காகச் செலவு செய்பவர்களும்

இருப்பவர்கள் ஆயிரம் சொல்லட்டும்

இல்லாதவர்களுக்கு என்ன கவலை வேண்டிக் கிடக்கிறது

கவலைப்பட்டுக் கொட்ட முடி இல்லாத போது

*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...