9 Feb 2022

திசை தப்பலின் பின்னுள்ள பாதைகள்

திசை தப்பலின் பின்னுள்ள பாதைகள்

அடிப்படையில் எதையும் எதுவும் செய்ய முடியாது

முடிவில் உண்டாவதைத் தடுக்க முடியாது

ஆழ்மனதில் பதிந்து விட்டபடி நடப்பவைகளின்

தொடர்புகள் அவ்வளவு எளிதில் விளங்காதவை

விருப்பத்தின் நம்பிக்கைகள் திசை தப்பக் கூடியவை

நீங்களே நினைத்தாலும் மாற்றிக் கொள்வது அசாத்தியமாகலாம்

எதிலும் உண்மைகள் இல்லாமல் இல்லை

எல்லா உண்மைகளும் உங்களுக்குப் பயன்படாத உண்மைகள்

மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டப்படுவதால்

உண்மைகள் வெறுப்புக்கு உள்ளாகின்றன

உங்களுக்கான உண்மை என்பது வேறு

அதை மற்றவர்களின் உண்மையில் தேட முடியாது

அடுத்தடுத்து நடந்து கொண்டே இருங்கள்

உங்களுக்கான உண்மைகள் புலப்படும்

உண்மைகளை எங்கும் தேடாதீர்கள் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்

தீவிரத் தேடல் தவற விடவும் செய்கிறது

எதிர்பார்ப்புகள் நிறைவுறும் புள்ளியில் ஏமாற்றத்தைத் தருகின்றன

நீங்கள் உங்கள் காலத்தில் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால்

அவரவர்கள் அவரவர் காலத்தில் நடந்து கொண்டிருக்கிறார்கள்

யாரும் யாருடைய காலத்திலும் நடக்க முடியாது

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...