19 Feb 2022

வழிகளைத் திறந்து கொள்ளும் இயற்கை

வழிகளைத் திறந்து கொள்ளும் இயற்கை

இயற்கை வழியொன்றைக் கேட்கிறது

அது எந்தக் காலத்திலும் எச்சரிப்பதில்லை

மறிக்கப்படும் வழிகளை இயற்கை திறந்து கொள்கிறது

வழிகளை மாற்றுவதும் பூட்டுவதும் மனிதர்களின் வேலை

திறப்புகளை உருவாக்கிக் கொள்வது இயற்கையின் இயற்கை

வெள்ளங்கள் பயமுறுத்தும் போது

இயற்கை கேட்பதெல்லாம் வழிந்தோடுவதற்கான வழிகளை

புயல்காற்று வீசும் போதெல்லாம்

இயற்கை கேட்பதெல்லாம் காற்றுக்கான தடையற்ற பாதைகளை

பூகம்பப் பொழுதுகளில்

இயற்கை கேட்பதெல்லாம் ஆட்டத்தை மறிக்காத வழிகளை

சுனாமியின் கணங்களில்

இயற்கை கேட்பதெல்லாம் கரைவெளிகளின் வழிகளை

இயற்கையின் விருப்பமெல்லாம் திறந்து கிடக்கும் வழிகள்

வழிகள் அடைபடும் போது இயற்கை திறந்து கொள்கிறது

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...