17 Feb 2022

தோன்றாப் புள்ளி

தோன்றாப் புள்ளி

ஒன்றும் தோன்றவில்லை

அதனால் ஒன்றுமில்லை

வெறுமையின் மனம் வெற்றிடமாயிருக்கிறது

நட்சத்திரங்கள் வடிந்த விட்ட வானின் பேரமைதி

வற்றி விட்ட குளத்தில் தோன்றாத நீரலைகள்

அலையில்லாத ஆழக்கடல் போல

சொல்ல சொல்ல நழுவித்தான் போகும்

எதுவும் தோன்றாத மனதை

எப்படியும் சொல்வதற்கில்லை

கனவுகள் காணாமல் போன தூக்கம்

இறந்து விட்ட ஒரு நொடி

சட்டென வாய்ப்பதைச் சொல்வது

ஜாலக் கதைகளின் சோடனைகளில் சிக்கக் கூடும்

அங்கொன்றுமில்லை என்று சொல்கையில்

ஏதோ இருப்பது போன்ற தோற்றம் தரக் கூடும்

இருப்பதின் மறைவன்று

இல்லாததின் திறப்பு வாய்க்கையில்

சொல்வதற்கு ஏதுமில்லை

சொற்களை உள்ளிழுத்துக் கொள்ளும்

பெருந்துளையில் விழுகையில்

திறந்திருப்பது பெரிதினும் பெரிது

விழுந்திருப்பது சிறிதினும் மிகச் சிறிது

தோன்றாப் புள்ளியில் விரிவது ஒரு பெருவட்டம்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...