15 Feb 2022

பொறுப்பைச் சுமக்கும் கடவுளர்கள்

பொறுப்பைச் சுமக்கும் கடவுளர்கள்

கரை பெயர்ந்து கொண்டிருக்கிறது என்பவர்கள்

ஆழம் குறைந்து கொண்டிருப்பதை  நம்ப மாட்டார்கள்

சிறகுகளில் அடித்தால் வானத்துக்கு வலிக்குமா என்பதை

சந்தேகத்துடன் எதிர்கொள்வார்கள்

சாத்தியமான வகைகளில் மட்டுமா எல்லாம் நிகழும்

அசாத்தியமான நிகழ்வுகள் வேதனையைக் கூட்டுகின்றன

இப்படி நிகழ வேண்டும் என்ற நம்பிக்கை

எப்படியோ வேரூன்றி பிரார்த்தனைகளாய் ஒலிக்கின்றன

கடவுள்கள் நம்பிக்கையின் காவலர்களாய்

பொறுப்பு சுமந்து அயர்ந்து போகிறார்கள்

ஏதோ ஒன்று நடப்பதை ஏற்றுக் கொண்டு விட்டால்

மௌனங்களில் உறைந்து விடுகிறது உலகம்

எண்ணங்கள் பெயர்ந்த பின்

யாதொன்று பெயர்தலும் பொருட்டாகாதோ என்னவோ

முழுச்சுற்று முடிந்தாலும் மறுசுற்றுக்குத் தாயாராகின்றன சக்கரங்கள்

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...