9 Dec 2021

கள் வடியும் பூக்கள்

கள் வடியும் பூக்கள்

கவர்ச்சி ஆடை என்றார்கள்

சிக்கனத்தைக் கற்றுத் தருகிறீர்கள் என்றேன்

துள்ளல் நடனம் என்றார்கள்

சுறுசுறுப்பைக் கற்றுத் தருகிறீர்கள் என்றேன்

முத்தக் காட்சி என்றார்கள்

காதலைக் கற்றுத் தருகிறீர்கள் என்றேன்

குளியறையில் ஒரு காட்சி என்றார்கள்

சுத்தம் சுகாதாரத்தைக் கற்றுத் தருகிறீர்கள் என்றேன்

படுக்கையறையிலும் ஒரு காட்சி என்றார்கள்

பாலியல் கல்வியைக் கற்றுத் தருகிறீர்கள் என்றேன்

நாயகன் அறைவதாய் ஒரு காட்சி என்றார்கள்

கன்னம் சிவக்கும் சிவப்பழகைப் பெற்றுத் தருகிறீர்கள் என்றேன்

கதையின் முடிவில் இறந்து விடுகிறீர்கள் என்றார்கள்

நல்லவேளை மோட்சம் தந்தீர்கள் என்றேன்

இன்னும் பத்து வருடத்திற்கு அசைக்க முடியாது என்றார்கள்

என் கதையை நீங்களே எழுதுங்கள் என்றேன்

அன்று தொடங்கி இன்று வரை கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்

தசாப்தங்கள் கடந்து கொண்டிருக்கின்றன

நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம்

பூக்களில் கள் வடியும் கதைகள் பிறந்து கொண்டிருக்கின்றன

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...