8 Dec 2021

விஷக் குறியீடு

விஷக் குறியீடு

விஷமில்லாதிருந்தால் பாம்புகளை வளர்ப்போர்

பல்கிப் பெருகியிருக்கலாம்

மீன்களைப் போல பாம்புகளும்

மனிதர் உணவாகிப் போயிருக்கலாம்

விஷம் என்ற புள்ளி அன்றோ உருவாக்குகிறது

பாம்புகளுக்குப் பயப்படும் மனிதர்களையும்

மனிதர்களுக்குப் பயப்படும் பாம்புகளையும்

மனிதர்களைக் கொல்வது பாம்பின் விஷமென்றால்

பாம்புகளைக் கொல்வது மனிதர்களின் விஷமன்றோ

புற்றடிக் கோயில்களைக் காண்கையில்

நாகம்மாள் நாகராசு எனும் பெயர்களை கேட்கையில்

விஷத்தின் மீதான பயமன்றோ

பாம்புகளின் மீதான பிரியமாகத் தோற்றம் தருகிறது

எலிகளை விழுங்கும் விஷமற்ற பாம்புகள் இருந்தால்

எல்லா வீடுகளிலும் பூனைகளுக்குப் பதில்

பாம்புகள் செல்லப் பிராணியாகியிருக்கும்

பாவம் பூனைகள் பாம்புகளைச் சபித்தபடி திரிந்திருக்கும்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...