23 Dec 2021

அவர்கள் அப்படித்தான்

அவர்கள் அப்படித்தான்

யார் மீதும் வருத்தப்பட முடியாது

அவர்கள் அப்படித்தான்

அவர்கள் சுயநலமாய் இருப்பதும்

ஏமாற்றுக்காரர்களாய் இருப்பதும்

வஞ்சகர்களாய் இருப்பதும்

அபூர்வமாய் சில நேரங்களில் நல்லவர்களாய் இருப்பதும்

விஷமுள்ள பாம்புகளும் விஷமற்ற பாம்புகளும்

இருப்பதைப் போலத்தான்

எதற்காக யார் என்ன செய்ய முடியும்

அவர்கள் அப்படித்தான்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...