25 Dec 2021

யுகாந்திரங்களின் காட்சி

யுகாந்திரங்களின் காட்சி

நெடுங்காலமாக இவர்கள் பேசிப் பேசியே

விதவிதமாக ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்

பொய்களை வாக்குறுதிகளாக அளிக்கிறார்கள்

தவறுகளைச் சாமர்த்தியமான வார்த்தைகளில் புதைக்கிறார்கள்

இயலாமைகளைச் சாதனைகளாகப் பிரகடனம் செய்கிறார்கள்

ஆக வேண்டிய காரியம் குறித்து மௌனம் சாதிக்கிறார்கள்

ஒப்பந்தம் மீறப்பட்டது குறித்து அமைதி காக்கிறார்கள்

சரியும் தவறும் எதுவென்று அவர்களுக்குத் தெரியும்

தவறுகளைச் சரியென்று சொல்வதில்தான்

அவர்களின் அதிகாரம் அடங்கியிருக்கிறது

சரியானவற்றைத் தவறென்று நிரூபிப்பதில்தான்

அவர்களின் சாசுவதங்கள் நிறைந்திருக்கின்றன

வாய் வார்த்தைகளை வாழ்க்கையாக

முடித்து விட முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது

அதற்கேற்ப ருசி என்று சொன்னால் வயிறு நிறைந்து விட்டதாக

நாங்கள் நடித்துக் காட்ட வேண்டியதாக இருக்கிறது

நடித்துக் காட்டுவதை உலகம் உண்மையென

யுகாந்தரம் யுகாந்திரமாக நம்பிக் கொண்டிருக்கிறது

*****

No comments:

Post a Comment

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா?

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா? சாமியாடுவதன் பின்னணி என்ன? அப்போது சொல்லப்படும் அருள்வாக்கு பலிக்குமா? இனிய நண்பர் க...