19 Dec 2021

அழகிய நேர்த்தியான உருண்டை

அழகிய நேர்த்தியான உருண்டை

முடியாது என்பதற்காக விட்டு விட முடியாது

முடிந்த மட்டும் எதிர்மறை எண்ணங்கள் கொள்ளலாம்

ஆனால் செய்துதான் ஆக வேண்டும்

அது நிறைவேற்றப்பட வேண்டிய பட்டியலில் இருக்கிறது

ஏதோ ஒன்று தவறாகி விடலாம்

ஏதோ அந்த ஒரு தவறுதான் அத்தனையையும்

ஒட்டுமொத்தமாக நிலைகுழையச் செய்யலாம்

எல்லாவற்றிலும் இப்படித்தான்

ஏதோ ஒரு தவறுதான் எல்லாவற்றையும் வீழ்த்துகிறது

வீழ்ந்தாலும் வீரமோடு எழுந்த நிற்க வேண்டும்

நேர்ந்து விட்ட சிறு தவறுக்காகக் கண்ணீர் உகுக்கக் கூடாது

அது அப்படித்தான் தவறுகள் நேர்ந்து கொண்டே இருக்கும்

முயற்சிகளும் தொடர்ந்து கொண்டிருக்கும்

இயங்கிக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியேது

ஒவ்வொன்றையும் ஒரு தவறுக்காக நிறுத்த முனைந்தால்

உலகம் சுற்றுவதும் நின்று போகலாம்

காலத்தின் அச்சில் சுழன்று கொண்டிருக்கையில்

தவறுகள் தேய்ந்து மறைந்துப் போகின்றன

கையில் இருப்பது அழகிய நேர்த்தியான உருண்டை

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...