17 Dec 2021

கதவுகள்

கதவுகள்

மோனநிலையில் இருப்பதாகச் சொன்னார்கள்

நானோ நோயுற்ற துயரத்தைச் சுமந்தவனாய்

எதையும் சொல்ல முடியாத நிலையில் இருந்தேன்

அடைபட்ட நீர் ஒழுகுவதைப் போல

வார்த்தைகள் கசிந்தபடி வெளிவந்தன

உடலெங்கும் பிரவகித்த வலியில்

இடம் சுட்டி வலி விளக்கம் செய்ய இயலாதிருந்தேன்

கையில் இருந்த பணத்துக்கும்

மருத்துவர் சொன்ன கட்டணத்துக்கும் நிலவிய வேறுபாட்டால்

அரைகுறை சிகிச்சையோடு திருப்பி அனுப்பப்பட்டேன்

சில நாட்கள் வரை தின்ற மருந்துகளில்

நோய் வெருண்டோடுவதோ அல்லது

மருந்துகளின் போதாமையால்

நோய் என்னைத் தின்று கொள்வதோ

காலத்தின் கரைகளில் ஒதுங்கப் போகும் துரும்பு

யார் இதற்கென குற்றவுணர்ச்சி கொள்ளப் போகிறார்கள்

கட்டணங்கள் தீர்மானிக்கும் உலக நியதிகளின்படி

பணம் இல்லாத ஒருவருக்கு மோட்சத்தின் கதவுகள்

எந்நேரமும் திறந்தே இருக்கும்

பணம் இருக்கும் ஒருவருக்குச் சிகிச்சையின் கதவுகள்

எந்நேரமும் திறந்தே இருக்கும்

*****

2 comments:

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...