24 Dec 2021

நிகழ்த்துக் கலையின் சூட்சமங்கள்

நிகழ்த்துக் கலையின் சூட்சமங்கள்

முன்பு அவர்களை நல்லவர்களாக நினைக்க வைத்ததுதான்

இப்போது அவர்களைக் கெட்டவர்களாக நினைக்க வைக்கிறது

அவர்களைப் பற்றி எதுவும் நினைத்திருக்க வேண்டியதில்லை

அவர்கள் நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ

எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்

இனிவரும் காலங்களிலும் எப்படியோ இருந்துத் தொலையட்டும்

நல்லவர்களால் நல்லன நிகழ்ந்து விடும் என்றும்

கெட்டவர்களால் கெடுதல் நிகழ்ந்து விடும் என்றும்

நினைக்கும் எண்ணங்களால் ஏதோதோ

சம்பந்தம் இல்லாமல் வாழ்க்கையில் நிகழ்ந்துவிடுகின்றன

நல்லவர்கள் மத்தியில் கெடுதல்களும்

தீயவர்கள் மத்தியில் நன்மைகளும் மாறி மாறி நிகழ்ந்து விடுகின்றன

நிகழ்த்தும் முயற்சி எல்லாவற்றையும் மாற்றுகிறது

எண்ணம் வெறுமனே உட்கார்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது

எண்ணங்கள் எப்படி வேண்டுமானாலும் மாறும்

மாற்றிய பிறகும் வேறு விதமாக மாறும்

நிகழ்த்தும் முயற்சி ஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறது

அது நிகழ்த்துவதை மட்டுமே சொல்கிறது

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...