7 Nov 2021

உயிர்த்திருப்பதன் அதிசயங்கள்

உயிர்த்திருப்பதன் அதிசயங்கள்

எப்போதும் என்னைப் பார்த்துக் குரைக்கும் நாய்

திருடர்களைத் தவற விடுகிறது

மீன் குழம்பின் வாசனைக்கு வந்து விடும் பூனை

சகல எலிகளையும் தப்ப விட்டு விடுகிறது

கொளுத்தி வைத்த கொசுவர்த்தி

வெளிக் கொசுக்களை உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறது

பசி தீர்க்க வாங்கி வைத்த தோசை மாவில்

பல்லியொன்று செத்துக் கிடக்கிறது

படுக்கை விரிப்பை விரித்துப் போடுகையில்

உறக்கம் கலைத்த கோபத்தில்

உள்ளுக்குள் இருந்த பாம்பு சீறி வருகிறது

எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து

இருப்பின் சாத்தியங்களில் நிகழும் அபத்தங்களால்

உயிர்த்திருப்பதன் அதிசயங்கள் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை என்று

கனவில் வரும் பிசாசுகள் ஆறுதல் சொல்கின்றன

அட்சரம் பிசாகமல் தொடரும்

அலுவல் வாழ்க்கையில் ஈக்கள் மொய்க்கின்றன

மாதக் கடைசியில் வரும் ஊதியத்தை

கட்டெறும்புகள் வாங்கிக் கொண்டு ஓடுகின்றன

கடன்காரர்கள் அடையாளம் தெரியாத கோபத்தோடு

நடுநிசியில் துரத்திக் கொண்டு வருகிறார்கள்

அகப்படாமல் அகதி போல தப்பித்து ஓடி வருகையில்

உள்ளே விடாமல் வீட்டுக்கதவுகள் தானாக மூடிக் கொள்கின்றன

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...