6 Nov 2021

பாத்திர மயக்கம்

பாத்திர மயக்கம்

முதலில் நாயகனாக அழைத்தார்கள்

என்ன நினைத்தார்களோ வில்லனாக்கினார்கள்

அதுவும் ஒத்து வராத போது காமெடியனாக்கிப் பார்த்தார்கள்

இதுவும் ஒத்து வராத போது

குணச்சித்திர வேடத்திற்கு முயன்று பார்த்தார்கள்

கொஞ்சம் தயங்கி எதுவும் ஒத்து வரவில்லை என

நாயகி வேடம் பரவாயில்லையா என்றார்கள்

நடிப்பவருக்கென்ன நாய் வேடத்திற்கும் தயார் என்ற போது

குரைப்பொலி சரியில்லை என்று பூனை வேடம் தந்தார்கள்

கடைசியில் புல்லரித்துப் போனார்கள்

இப்படி ஒரு நடிகரைக் கண்டதில்லை என

உனக்கொரு பயோபிக் எடுக்க வேண்டும் என்று

என் பாத்திரத்தை வேறொருவருக்குத் தந்தார்கள்

அதில் எனக்கொரு துணைப் பாத்திரம் தந்தார்கள்

துணைப்பாத்திரத்தில் நடித்ததற்கு விருதும் தந்தார்கள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...