3 Nov 2021

சுவர் சூழ் வீடுகள்

சுவர் சூழ் வீடுகள்

வேலிகள் நிறைந்த வீடுகள் தோறும்

சுற்றுச்சுவர்கள் சூழ்ந்திருக்கின்றன

வண்ணத்துப் பூச்சிகளும் சிட்டுக்குருவிகளும் வந்த போதிருந்த

வேலிச்சண்டைகள் இப்போதில்லை என்று

சிலாகித்துக் கொள்கிறார் நாட்டாமைக்காரர்

கற்களும் மணலும் ஜல்லிகளும்

எங்கிருந்தோ வந்து இறங்கிக் கொண்டிருக்கின்றன

சாலைகள் காயம் பட்டு சீழ் பிடித்தது போல

நீர் தேங்கி நிறைமாதமாய் நிற்கின்றன

வேலித் தகராறில் ஓரண்டை இழுத்தவரின்

தலையை வெட்டி விட்டு சிறையிலிருக்கும்

தலையாரி பெயிலில் வந்து போகும் போதெல்லாம்

சுற்றிலும் சுவராய் இருப்பதாய்ச் சொல்லி விட்டுப் போவார்

இங்கு மட்டும் என்னவாம்

சுவர் சூழ்ந்த சிறைக்குள் இருக்கின்றன வீடுகள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...